ஒரே ஒரு கார்ட்டூனை பார்த்ததும் செல்போனை தூக்கி எறிந்த ஆனந்த் மஹிந்திரா!

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (17:17 IST)
ஒரே ஒரு கார்ட்டூனை பார்த்ததும் செல்போனை தூக்கி எறிந்த ஆனந்த் மஹிந்திரா!
 பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஒரே ஒரு கார்ட்டூனை பார்த்ததும் செல்போனை தூக்கி எரிந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பல நகைச்சுவையான மற்றும் ஊக்கமளிக்கும் பதிவுகளை செய்து வருவது வழக்கம்.
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு கார்ட்டூனை பதிவு செய்து அந்த கார்ட்டூனை பார்த்ததும் செல்போனை தூர எறிந்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார். அந்த கார்ட்டூனில் முதியோர் காப்பகத்தில் உள்ள சிலர் மொபைல் போனை தலை குனிந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் உள்ளன. 
 
அவர்கள் மொபைல் போனை பிடிக்கும் போது எப்படி இருப்பார்களோ அதேபோல் உடல் வளைந்து முன்னோக்கி காணப்படுகின்றனர் என்றும் இந்த கார்ட்டூன் தனக்கு மிகுந்த மனச் சோர்வை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
செல்போனை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் வயதான பின்னர் தலைகுனிந்தவாறு இருக்கும் நிலை ஏற்படும் என்ற என்று அறிவிக்கும் இந்த கார்ட்டுனை பார்த்ததும் தான் மொபைல் போனை தூக்கி எறிந்து விட்டதாக கூறியுள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்