ஏன் சப்பாத்திய ஒழுங்கா சுடல? மனைவிக்கு முத்தலாக் சொன்ன கணவன்

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (15:40 IST)
உத்திரப்பிரதேச மாநிலத்தில் தீய்ந்த ரொட்டியை பரிமாறியதாகக் கூறி நபர் ஒருவர் மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் அரங்கேறிள்ளது.
இஸ்லாமிய ஆண்கள் தங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்வது அம்மத வழக்கமாக இருக்கும் நிலையில் இதனை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. இருந்தபோதிலும் பல முஸ்லிம் நண்பர்கள் இதனை பின்பற்றுவதில்லை.
 
இந்நிலையில் உத்திரப்பிரதேசம் மாநிலம், மஹோபா மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் தனது மனைவி சுட்டுக் கொடுத்த சப்பாத்தி தீய்ந்து விட்டதாக கூறி அவரிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் அவர் தனது மனைவிக்கு தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது கணவன் சில்லரை காரணத்திற்காக தன்னிடம் முத்தலாக் கூறியதாகவும், வீட்டை விட்டு வெளியே செல்ல வற்புறுத்தி, சிகரெட்டை கொண்டு உடலில் சூடு வைத்து துன்புறுத்தியதாகவும் புகார் அளித்துள்ளார். போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்