உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் பிரபல நடிகர்: பாஜகவில் இணைகிறாரா?

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (17:20 IST)
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று பிரபல நடிகர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அந்த நடிகர் பாஜகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 1100 கோடியை தாண்டி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த ஜூனியர் என்டிஆர் அமித்ஷாவை இன்று சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. சமீபத்தில் தெலுங்கானா சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூனியர் என்டிஆர் நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை பார்த்ததாகவும், இந்த படம் தனக்கு பிடித்து விட்டதால் அவரை சந்திக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது 
 
இதனையடுத்து இன்று அமிர்ஷா - ஜூனியர் என்டிஆர் சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்