கர்நாடகாவில் நாளை அனைத்து தனியார் மருத்துவமனைகளும் ஸ்டிரைக்

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2017 (18:47 IST)
சிகிச்சைகளுக்கான கட்டண நிர்ணயம் விவகாரத்தில் நாளை கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.


 

 
கர்நாடக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டண நிர்ணயம் செய்யும் முடிவை அறிவித்தது. எந்தெந்த நோய்களுக்கு என்ன கட்டணம் வசூலிக்க வேண்டும் என வரையறை செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த சட்டம் கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் இயற்றப்பட உள்ளது.
 
அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் கர்நாடக கிளை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்யக்கோரி அழைப்பு விடுத்து இருந்தது. இதையடுத்து நாளை கர்நாடகாவில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான சுமார் 50,000 மருத்துவம் சம்பந்தப்பட்ட எந்த இடங்களும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-
 
இந்த சட்டம் தனியார் மருத்துவமனையில் வேலை செய்பவர்களை பாதிப்பை ஏற்படுத்தும். எங்களுக்கு முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேச வேண்டும். அதற்குதான் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை செய்ய முடிவு செய்து இருக்கிறோம் என்றனர்.
 
மேலும் மிகவும் மோசமான நிலையில் வரும் நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்