வீட்டுக்குழாயில் வந்த சாராயம் – உண்மையானது சந்தானம் காமெடி!

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (14:41 IST)
கோப்புப் படம்

கேரளாவில் வீட்டுக்குழாய்களில் குழிதோண்டி ஊற்றப்பட்ட சாராயம் குடியிருப்புப் பகுதிகளின் குழாய்களில் வந்ததால் குழப்பம் உருவானது.

கேரளாவின் கலால்துறை தன்னிடம் 6000 லிட்டருக்கும் மேற்பட்ட கைப்பற்ற சாராயங்களை அழிக்க முடிவு செய்துள்ளது. வழக்கம் போல எரிக்காமல் இம்முறை குழிதோண்டி புதைக்க முடிவு செய்துள்ளது. எரிப்பதால் ஏற்படும் மாசுபாட்டைத் தவிர்ப்பதற்காக. ஆனால் இந்த யோசனை அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் அப்போது நினைக்கவில்லை.

காரணம் அவர்கள் குழியில் ஊற்றிய மதுவகைகள் அனைத்தும் எப்படியோ . அங்கிருந்த குடிநீர் குழாயில் கலந்துள்ளது. இப்படி கலந்த மது அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் குழாய்களில் வந்ததால் மக்கள் அவதிக்காளாகியுள்ளனர். இதனால் குழப்பங்கள் உண்டாகவே பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிகமாக தண்ணீர் வழங்கி மன்னிப்புக் கேட்டுள்ளது கலால்துறை. உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என அக்குடியிருப்பு மக்கள் நகராட்சி நிர்வாகத்தில் புகார் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்