90 மணி நேர வேலை.. மனுஷங்களா இல்லை மெஷினா? - அகிலாஷ் யாதவ் ஆத்திரம்!

Prasanth Karthick
செவ்வாய், 4 மார்ச் 2025 (09:37 IST)

வாரம் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என சிலர் பேசி வருவது குறித்து கருத்துக் கூறியுள்ள அகிலேஷ் யாதவ், இந்த கண்ணோட்டம் தவறானது என தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில காலமாக சில கார்ப்பெரேட் நிறுவனர்கள் தொழிலாளிகள் வாரம் 90 மணி நேரம் வேலைபார்க்க வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்க வேண்டும் என்றும் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் “90 மணி நேரம் வேலை என்ற இந்த யோசனை மனிதர்களுக்கா அல்லது ரோபாட்டுகளுக்கா? மக்கள் அவர்கள் குடும்பத்துடன் வாழ விரும்புகிறார்கள். ஒரு சிலர்தான் பொருளாதார வளர்ச்சியால் பயன் அடைகிறார்கள். பொருளாதாரம் 30 ட்ரில்லியனை எட்டுகிறதா, 100 ட்ரில்லியனை எட்டுகிறதா என்பதெல்லாம் சாதாரண இந்திய குடிமகன் வாழ்வில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

 

இப்போது எல்லாரும் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறுபவர்கள், அதை ஆதரிப்பவர்கள் அவர்களுடைய இளமைப்பருவத்தில் அவ்வளவு நேரம் வேலை பார்த்தார்களா? அப்படி வேலை பார்த்திருந்தால் ஏன் நமது பொருளாதாரம் இந்த நிலைமையில் உள்ளது” என காட்டமாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்