இந்த நிலையில், எந்தவொரு வாக்குறுதியும் வழங்கப்படவில்லை என்றும், எனவே தேமுதிகவுக்கு ராஜ்யசபா தொகுதி வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் இதுகுறித்து பிரேமலதாவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் எந்தவித பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார். ஆனால், தனது எக்ஸ் பக்கத்தில் அவர், "சத்தியம் வெல்லும், நாளை நமதே" என பதிவு செய்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.