வயநாடு நிலச்சரிவு.. 5 நாட்களாக உயிருக்கு போராடிய 3 பேர் உயிருடன் மீட்பு..

Mahendran
சனி, 3 ஆகஸ்ட் 2024 (12:45 IST)
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 5 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 3 பேரை கண்டுபிடித்த கடலோர காவல் படை அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.
 
சமீபத்தில் மிக மோசமாக நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் வெள்ளரிமலை பகுதியில் உள்ள சூஜிப்பாறை நீர்வீழ்ச்சியின் பாறைகளின் மேல் 3 பேர் அமர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
3 பேரும் பாறைகளின் மேல் அமர்ந்தபடி உதவி கேட்கும் வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து அவர்களை மீட்க மீட்பு படையினர் திட்டமிட்டனர். வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அருகே நெருங்குவதில் சிரமம் என்பதை புரிந்து கொண்ட மீட்பு படையினர் உடனே ஹெலிகாப்டர் மூலம் 3 பேரையும் மீட்டனர். தற்போது 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த நிலையில் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5வது நாளாக மீட்புப்பணி தொடர்ந்து வருகிறது.
 
நிலச்சரிவு ஏற்பட்டு நான்கு நாள் கழித்து பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை நேற்று மீட்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சிலரை உயிருடன் மீட்கலாம் என்ற நம்பிக்கை மீட்பு குழுவினர்களுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்