வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் தோன்றும் என்றும் இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வு நிபுணர் தமிழ்நாடு வெதர்மேன் என்று கூறப்படும் பிரதீப் ஜான் நவம்பர் 12 முதல் வடகிழக்கு பருவமழை சூடு பிடிக்கும் என்று கணித்துள்ளார். குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.