டெல்லி கலவரம்… பாஜகவில் இருந்து விலகிய நடிகை !

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (17:14 IST)
டெல்லி கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பேசிய பாஜகவினர் மேல் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அக்கட்சியைச் சேர்ந்த சுபத்ரா முகர்ஜி வெளியேறியுள்ளார்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த சின்னத்திரை நடிகை சுபத்ரா முகர்ஜி. மேற்கு வங்கத்தில் மிகவும் பிரபலமான இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இடதுசாரிகள் மற்றும் திரினாமூல் காங்கிரஸின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் இப்போதுதான் பாஜக தங்கள் காலை ஊன்ற ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க பாஜகவின் முகங்களில் ஒன்றான சுபத்ரா கட்சியை விட்டு விலகியுள்ளார்.

டெல்லியில் நடந்த கலவரத்துக்கு பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோர் வன்முறையை தூண்டும் பேச்சே காரணம் என்றும் என அவர்கள் மேல் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாலும் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அவரது விலகல் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்