நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம்

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (14:04 IST)
பிரபல நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.


 

 
கடந்த ஜூலை 10ஆம் தேதி நடிகர் திலீப், பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். நடிகர் திலீப் சார்ப்பில் தொடர்ந்து ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் 4 முறை தொடர்ந்து ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இந்நிலையில் 5 முறையாக தாக்கால் செய்த மனு விசாரணைக்கு வந்ததில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை மறுக்கப்பட்டு வந்த ஜாமீன் தற்போது வழங்க காவல்துறையினர் உதவியாய் இருந்துள்ளனர். அதாவது, இந்த வழக்கில் 60 நாட்களுள் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. 
 
ஆனால் 85 நாட்கள் ஆகியும் காவல்துறையினர் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதை வைத்து திலீப் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு திலீப்புக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்