கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மலையாள நடிகர் திலீப்பிற்கு சொந்தமான மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டன.
நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பிற்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது. அவருடைய ஜாமீன் மறுக்கப்பட்டது. அதன் பின் அவரின் வலது கரமாக விளங்கிய அவரின் மேனேஜர் அப்புண்ணி, அப்ரூவராக மாறினார். எனவே, இந்த வழக்கிலிருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை திலீப்பிற்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் அவருக்கு சொந்தாமான திரையரங்கத்தின் செயல்பாட்டை நகராட்சி முடக்கியுள்ளது. 3D மற்றும் 3K தொழில் நுட்பத்தைக் கொண்ட அந்த மல்டிபிளக்ஸ் திரையரங்கம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து சாலக்குடி நகராட்சி தலைவர் உஷா பரமேஸ்வரன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மேலும், திலீப்பின் திரையரங்க உரிமையாள சான்றிதழும், உரிமமும் ரத்து செய்யப்பட இருக்கிறது.