இளைஞர் கொலை வழக்கு: நடிகர் தர்ஷன் அதிரடி கைது..!

Mahendran
செவ்வாய், 11 ஜூன் 2024 (12:14 IST)
பெங்களூருவில் 2 நாட்களுக்கு முன், மருந்தகத்தில் வேலை பார்த்து வந்த ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் கன்னட திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ரேணுகா சுவாமி  என்ற இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த விசாரணையில் தர்ஷனின் நெருங்கிய தோழிக்கு, ரேணுகா சுவாமி அடிக்கடி குறுந்தகவல்கள் அனுப்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
காட்டேரா, குருஷேத்ரா, கிராந்தி உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கன்னட சினிமாவில் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். மேலும் 2019 நாடாளுமன்ற தேர்தலில், நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக மாண்டியா தொகுதியில் தர்ஷன் பிரசாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
நடிகர் தர்ஷன் மைசூரில் உள்ள பண்ணை வீட்டில் இருந்த போது பெங்களுர் போலீசார் அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது.  
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்