தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆபாச வீடியோ இருப்பதாக பணம் கேட்டு தருமபுரம் ஆதீனம் மிரட்டப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் தலைமறைவாக செந்தில் இருப்பதாக செய்தி வெளியானதை அடுத்து தனிப்படை போலீசார் வாரணாசி சென்று அவரை கைது செய்தனர்.
தருமபுரம் ஆதீன வழக்கில் இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்டவர் திருவையாறு செந்தில் என்பதும், 4 மாதமாக தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது கைது செந்தில் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.