மைனர் பெண்களை பாலியல் வன்கொடுமை செயவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அதே நேரத்தில் வளர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது புரிந்து கொள்ளக்கூடியது என்று பாஜக எம்.பி. ரமேஷ் பியாஸ் கூறியுள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சைலேஷ் நிதின் திரிவேதி, பாலியல் வன்கொடுமை யாருக்கு நிகழ்ந்தாலும் அது கொடிய குற்றம் என்று கூறினார். காங்கிரஸ் தரப்பில் சிறுமி மற்றும் வளர்ந்த பெண்கள் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செயப்பட்டால் அது கொடிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய கருத்துகளை மறுத்த பாஜக எம்.பி. ரமேஷ் பியாஸ் கூறியதாவது:-
மைனர் பெண்களை பாலியல் வன்கொடுமை செயவர்கள் தூக்கிலிட வேண்டும். அதே நேரத்தில் வளர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது புரிந்து கொள்ளக்கூடியது என்று கூறினார்.
மேலும் டெல்லி நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை இந்தியாவையே அதிரவைத்தது. சத்தீஸ்கர் பகுதியில் நடந்த சம்பவம் அவமானம் விஷயம் என்று தெரிவித்தார்.