தென்கொரியாவில் அடுத்த ஆண்டு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனை அடுத்து, நாடாளுமன்றம் முடங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற அவசரநிலை பிரகடனம் செய்ய அதிபர் யூன்சுக் அதிரடியாக அறிவித்தார்.
ஆனால், தென்கொரிய அதிபரின் இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. லட்சக்கணக்கான மக்கள் நடு ரோட்டில் இன்று திடீரென போராட்டம் செய்தனர். எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டால் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்ற போதிலும், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் லட்ச கணக்கில் மக்கள் கூடியதால் ராணுவத்தால் கூட சமாளிக்க முடியவில்லை.
இதனை அடுத்து, "வேறு வழியில்லாமல் எமர்ஜென்சியை கொண்டு வந்தேன்" என்று அறிவித்த அதிபர், சில மணி நேரங்களில் எமர்ஜென்சியை வாபஸ் செய்வதாக தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். மேலும், அவசரநிலை நடவடிக்கைக்காக குவிக்கப்பட்ட ராணுவ வீரர்களையும் வாபஸ் பெற்றுள்ளோம் என்றும், நாடாளுமன்றத்தின் கோரிக்கையை ஏற்று மந்திரி சபை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலையை வாபஸ் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.