காங்கிரஸ் மோடி பக்கம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது: ஆம் ஆத்மி கட்சி அறிக்கை

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (17:10 IST)
காங்கிரஸ் மோடி பக்கம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது என ஆம் ஆத்மி கட்சி காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் காங்கிரஸ் கட்சியை ஆம் ஆத்மி கடும் விமர்சனம் செய்துள்ளது.
 
டெல்லி அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுப்பியுள்ள ஆம் ஆத்மி கட்சி  காங்கிரஸ் மக்கள் பக்கம் இருக்கிறதா? அல்லது மோடி அரசு பக்கம் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது என தெரிவித்துள்ளது
 
மேலும் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்த ஆம் ஆத்மி  கூட்டத்தில் பங்கேற்ற 16 கட்சிகளில் 12 கட்சிகள் மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ளன, அதில் 11 கட்சிகள் அவசர சட்டத்தை எதிர்க்கின்றன என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்