எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வாருங்கள்: ராகுல் காந்தி அழைப்பு..!

வெள்ளி, 23 ஜூன் 2023 (11:34 IST)
எதிர்க்கட்சியில் ஓரணியில் திரையில் வாருங்கள் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். 
 
பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று உள்ள நிலையில் சற்றுமுன் பாட்னா காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசினார்,
 
அப்போது அவர் கூறுகையில், ’எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள அழைப்பு விடுகிறேன் என்று தெரிவித்தார். இந்தியாவில் தற்போது நடைபெறுவது சித்தாந்தங்களுக்கு இடையிலான போர் என்றும் நாட்டு மக்களை பிரிக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். 
 
நாட்டையும் மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் பணியை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது என்றும் வெறுப்புணர்வை அன்பால் மட்டுமே வெல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்