செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி நிர்வாகி சஞ்சய்சிங் "எங்கள் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் தெளிவாக உள்ளார். மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டுதான் இந்தியா கூட்டணி உருவானது. அந்த தேர்தல் முடிந்துவிட்டதால், இனிமேல் நாங்கள் அந்த கூட்டணியில் இல்லை. இனிவரும் தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் எந்த தேர்தலையும் இணைந்து சந்திக்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உருவான இந்தியா கூட்டணி தற்போது சிதறும் நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே "இந்தியா கூட்டணிக்கு நான் தான் தலைமை வகிப்பேன்" என மம்தா பானர்ஜி கூறி வருகிறார். அவரது கருத்தை இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவரும் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.