ஆதார் சேவை மையங்களுக்கு 25ம் தேதி வரை விடுமுறை

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (08:08 IST)

நாடு முழுவதும் ஆதார் அட்டை பெறவும், திருத்தம் மேற்கொள்ளவும்  ஆதார் நிரந்தர  சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் ஆதார் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. 

இந்த ஆதார் சேவை மையங்களில் புதிய சாப்ட்வேர் அப்டேட் செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்காக 18ம்தேதி முதல் 25ம் தேதி வரை  ஆதார் சேவை மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆதார் மையங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஐடி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சர்வர் பழுதாகும் போதெல்லாம் ஆதார் பணிகளில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் அந்த ஐடியில் புதிய சாப்ட்வேர் அப்டேட் செய்து புதிய தொழில்நுட்பத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பணி கடந்த 18ம்தேதி தொடங்கியது. வரும் 25ம் தேதி வரை பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஆதார் சேவை மையங்களுக்கு 25ம்தேதி வரை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்களுக்கு புதிய ஆதார் எடுக்கவோ, திருத்தங்களையோ மேற்கொள்ள முடியாது.

எனவே பொதுமக்கள் யாரும் வர வேண்டாம். இந்த புதிய சாப்ட்வேர் அறிமுகப்படுத்திய பிறகே அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றனர்..

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்