ஆதாரை பிறப்புச் சான்றாக ஏற்க முடியாது: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உத்தரவு!

Mahendran

வியாழன், 18 ஜனவரி 2024 (15:22 IST)
வருங்கால வைப்பு நிதி திட்டங்களில் ஆதாரை பிறப்புச் சான்றாக ஏற்க முடியாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது,.

இந்த அறிவிப்பின்படி ஆதாரை பிறப்புச் சான்றாக ஏற்கும் வகையில், குறுகிய கால வைப்பு நிதி திட்டங்களில்  சேர விரும்பும் நபர்களுக்கு விதிக்கப்பட்டு வந்திருந்த விதிமுறைகளை ரத்து செய்வதாகும்.

இதன்படி, ஆதாரை பிறப்புச் சான்றாக சமர்ப்பித்து, குறுகிய கால வைப்பு நிதி திட்டங்களில் சேர விரும்பும் நபர்கள், ஆதாரின் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் வயதை நிர்ணயம் செய்ய முடியும் என்று UIDAI தெரிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பு ஆதாரை பிறப்புச் சான்றாக பயன்படுத்தி வரும் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்