வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவது இனி சாத்தியமே இல்லை! எல்லா புகழும் ஆதாருக்கே

Webdunia
வியாழன், 4 மே 2017 (06:43 IST)
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அத்தியாவசமான ஒன்று என்ற நிலை இந்தியாவுக்கு வந்துவிட்டது ஆதார் அட்டை இல்லை என்றால் இனி எந்த காரியமும் நடக்காது என்பது தெளிவாகிவிட்டது.



 


இந்த நிலையில் இனி விமான பயணம் செய்வதற்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான பயணத்துக்காக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே ஆதார் எண்ணை தெரிவிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்தின் நுழைவுமுனைகளில் வைக்கப்பட்டுள்ள இயந்திரம் மூலம் பயணிகள் தங்களது கையை ‘ஸ்கேன்’ செய்து கொள்ள வேண்டியது வரும்.

முன்பதிவின்போது ஆதார் அட்டையில் உள்ள கை ஸ்கேன், விமான நிலையத்தில் நுழையும் போது எடுக்கப்படும் ஸ்கேன் உடன் ஒத்து இருந்தால் மட்டுமே விமான பயணத்திற்கு அனுமதிக்கப்படுவர்.  இதன்மூலம் ஒருவர் பாஸ்போர்ட்டில் இன்னொருவர் புகைப்படத்தை ஒட்டி மோசடி செய்து, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவது எல்லாம் இனி சாத்தியமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம், விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு விடும்.
அடுத்த கட்டுரையில்