மேடையில் வைத்து முத்தம்: ஆடிப்போன ராகுல்காந்தி

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (16:29 IST)
பிரச்சார மேடையில் வைத்து பெண் ஒருவர் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சிகள் சூறாவளிப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பாக அதன் தலைவர் ராகுல் காந்தி, நாடெங்கிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
இந்நிலையில் குஜராத் மாநிலம் வல்சாடில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று மக்களிடையே பேசினார். பேசிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்துகொண்டிருந்தார்.
 
அப்போது மகளிரணி நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு மாலை அணிவித்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையே பெண் ஒருவர்  ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டு அவரின் கன்னத்தை கிள்ளி கொஞ்சினார். பின்னர் அங்கிருந்து சென்றார். இந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்