இஸ்லாமாபாத்: 70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண், முதலிரவின் ஏமாற்றிவிட்டு, நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடிய சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே முஸ்தபாவுக்கும், நஜ்மா பிபிக்கும் முதலிரவுக்கு ஏற்பாடு நடந்துள்ளது. முதலிரவின் போது, நஜ்மா பிபி தனது கணவர் முஸ்தபாவுக்கு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த முஸ்தபா மயங்கிவிட்டார். பின்னர் காலையில் முஸ்தபா எழுந்த போது அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை திருடி கொண்டு நஜ்மா பிபி ஓடிவிட்டதை முஸ்தபா புரிந்து கொண்டார்.
இதையடுத்து முதியவர் முஸ்தபா, போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னை நஜ்மா பிபி, ஒரு கும்பலுடன் சேர்ந்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும், அவர்களை விசாரித்து கைது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.