ஆப்பிள் நிறுவன நிர்வாகியை சுட்டுக்கொன்ற போலீஸார்

சனி, 29 செப்டம்பர் 2018 (14:42 IST)
உத்திரபிரதேசத்தில் ஆப்பிள் நிறுவன நிர்வாகியை போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் விவேக் திவாரி (38). இவருக்கு திருமணமாகி 12 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். விவேக் ஆப்பிள் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி வந்தார்.
 
இந்நிலையில் இன்று அதிகாலை விவேக், தனது ஆஃபிஸ் நண்பர்களுடன் காரில் வேகமாக சென்றுகொண்டிருந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் விவேக் திவாரியின் காரை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
 
ஆனால் விவேக் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் அவரை சந்தேகித்த போலீஸ்காரர், காரை நோக்கி சுட்டுள்ளார். இதில் இடது காதினுள் குண்டு பாய்ந்து விவேக் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள போலீஸ் அதிகாரி, நாங்கள் காரை நிறுத்த சொல்லியும் விவேக் காரை நிறுத்தவில்லை. மாறாக எங்கள் வாகனத்தின் மீது மோதினார். எங்கே எங்களையும் தாக்கிவிடுவாரோ என நினைத்து அவரை சுட்டுக்கொன்றேன். எங்களின் தற்காப்புக்காகவே இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக விவேக்கை கொன்ற போலீஸ்காரர் கூறியுள்ளார்.
 
என் கணவர் மரணம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஞாயம் கேட்கப்போகிறேன் என விவேக்கின் மனைவி கண்ணீர் மல்க கூறினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்