முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்.. மின்னஞ்சலில் வந்த கடிதத்தால் பரபரப்பு..!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (14:38 IST)
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சலில் வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் ரூ.20 கோடி பணம் கேட்டு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
அடையாளம் தெரியாத நபர் மூலம் பணம் கேட்டு முகேஷ் அம்பானி நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மேலும் தங்களிடம் இந்தியாவிலேயே மிகச்சிறந்த துப்பாக்கி சுடுபவர்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பொறுப்பாளர் மும்பையில் உள்ள காம்தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 
 
மும்பை போலீசார் 387 மற்றும் 506 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், விசாரணை தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்