நாடு முழுக்க பள்ளிகள் திறக்க வரைவு திட்டம்: மத்திய அரசு தீவிரம்

Webdunia
வியாழன், 28 மே 2020 (08:19 IST)
நாடு முழுக்க பள்ளிகள் திறக்க வரைவு திட்டம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றன
 
ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் செப்டம்பர் முதல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கலாம் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது தொடர்பாக வரைவு திட்டம் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த வரைவு திட்டத்தின்படி ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது
 
மேலும் அதிகமான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் ஷிப்ட் முறையில் பள்ளிகளை இயக்கவும் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த வரைவுத் திட்ட பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் என்றும் அதன்பிறகு முறையாக நாடு முழுவதும் பள்ளி திறப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்