2019ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் துவங்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு இந்த ஆண்டு பிப்ரவரிவரை தொடர்ந்தது. இதனால், அந்த மாநிலத்தில் 6,70,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்தன. 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
ஆனால், வெட்டுக்கிளி படையெடுப்பைப் பொறுத்தவரை அவை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்துடன் நின்றுவிடுவதே வழக்கமென்றும் தக்காணப் பீடபூமியைத் தாண்டி தமிழகம்வரை வந்ததில்லையென்றும் தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பற்றி மத்திய அரசு முதன்முறை விளக்கம் அளித்துள்ளது., அதில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் வரும்.