பிரதமர் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இன்று விவாதம்..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (07:41 IST)
பிரதமர் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி நிலையில் அதற்கு சபாநாயகரும் சமீபத்தில் அனுமதி கொடுத்தார். 
 
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற உள்ளது.  இந்த விவாதத்தின் முதல் நபராக ராகுல் காந்தி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றம் வந்துள்ள ராகுல் காந்தியின் நம்பிக்கை இல்லாத தீர்மானத்திற்கு எதிரான உரைக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பிரதமர் மோடி அரசு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தாலும் இந்த தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று தான் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்