வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: புயலாக மாறுமா?

Webdunia
சனி, 24 ஜூன் 2023 (16:50 IST)

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியில் காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 

இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் புதியதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மேற்குவங்க கடற்கரை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியை உருவாக்கி வருவதாகவும் இதன் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாகுமா என்பதை மாநில ஆய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்