அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட்ட உள்ளதை அடுத்து புதிய 500 ரூபாய் நோட்டு வெளியாக போவதாகவும் அதில் மகாத்மா காந்திக்கு பதில் ராமர் படமும் செங்கோட்டைக்கு பதில் ராமர் கோவிலிலும் இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இது குறித்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வட்டாரத்தில் இது குறித்து விசாரித்த போது இப்போதைக்கு புதிய 500 ரூபாய் நோட்டு எதுவும் வெளியிட திட்டம் இல்லை என்றும் புதிதாக பரவி வரும் ராமர் மற்றும் ராமர் கோவிலுடன் இருக்கும் 500 ரூபாய் நோட்டுகள் மார்பிங் செய்யப்பட்ட போலியான புகைப்படம் என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த போலி ஐநூறு ரூபாய் நோட்டு பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியை இணையதளத்தில் புதிய 500 ரூபாய் நோட்டு குறித்த எந்தவித தகவலும் இல்லை என்றதும் ராமர் குறிப்பாக ராமர் படம் போட்ட 500 ரூபாய் நோட்டு வெளியிடும் திட்டம் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களை குழப்பி வரும் இதுபோன்ற போலி ஐநூறு ரூபாய் நோட்டுக்களை பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது