பாஜகவின் ராமர் கோவில் அரசியல்.. வசமாக சிக்கி கொண்ட எதிர்க்கட்சிகள்..!

Siva

வியாழன், 18 ஜனவரி 2024 (06:48 IST)
பாஜகவில் ராமர் கோயில் அரசியலில் எதிர்க்கட்சிகள் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை வைத்து அதை வைத்து தேர்தல் அரசியலையும் பாஜக செய்து வருகிறது. 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டு வருவதாகவும் ராமருக்கு என்று ஒரு தனி வீடு இல்லாமல் இருந்த நிலையில் நாங்கள்தான் அவருக்கு கோயில் கட்டி கட்டியுள்ளோம்என்றும் பாஜக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
தென்னிந்தியாவில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் வட இந்தியாவில் பாஜகவிற்கு நாளுக்கு நாள்  வாக்கு அரசியலில் வெற்றி கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமர் கோயிலுக்கு சென்றால் மாற்று மதத்தவர்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்றும், செல்லவில்லை என்றால் ஒட்டுமொத்த இந்து ஓட்டுகளும் பறிபோகும் என்ற நிலையில் எதிர்க்கட்சிகள் உள்ளன. 
 
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என அறிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்களே அதற்கு  அதிருப்தி தெரிவித்துள்ளனர் 
 
மற்ற எதிர்க்கட்சிகளும் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகின்றன. மொத்தத்தில் வரும் தேர்தல் என்பது ராமர் கோயில் அரசியலால் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் தேர்தலாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்