வாட்ஸ் அப் விபரீதம் - கடைசி நேரத்தில் நின்று போன திருமணம்

Webdunia
ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (08:54 IST)
உத்திரப்பிரதேசத்தில் வாட்ஸ் அப்பால் கடைசி நேரத்தில் திருமண நிகழ்ச்சி  நின்றுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலம், அம்ரோகா மாவட்டத்திலுள்ள மெகந்தி என்பவரது மகளுக்கும், கமார் ஹைதர் என்பவரது மகனுக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.
 
மணமகள் மணமேடையில் அமர்ந்திருக்க, மணமகளும் அவரது வீட்டாரும் மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். கடைசி வரை அவர்கள் வரவே இல்லை.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மணமகன் வீட்டார் மணமகள் எந்நேரமும்  வாட்ஸ் அப்பிலேயே மூழ்கி இருப்பதால் தங்களுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரிவித்தனர். ஆனால் மணமகள் வீட்டாரோ மாப்பிள்ளை வீட்டார் ரூ.65 லட்சம் கேட்டார்கள், அதை கொடுக்காததாலேயே இப்படி கதை விடுகின்றனர் என கூறினர்.
 
மணமகள் வீட்டார் மணமகன் மீதும் அவரது பெற்றோர்கள் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாட்ஸ் அப்பால் திருமணம் நின்று போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்