ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

Siva

செவ்வாய், 21 மே 2024 (15:29 IST)
ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் எனமத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே பலமுறை சம்மன் அனுப்பியும் பிரஜ்வால் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் சிறப்பு புலனாய்வு குழு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீசும் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதையும்  மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்து ரேவண்ணா பாஸ்போர்ட் ரத்து செய்யும் நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
முன்னதாக கர்நாடக முன்னாள் அமைச்சரும், ஜேடி(எஸ்) தலைவருமானவர் எச்.டி.ரேவண்ணா, அவரது மகனும், ஹசன் தொகுதி எம்பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதும் பாலியல் புகார் இருந்தது. அவர் பல பெண்களை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து அவற்றை வீடியோவாக பதிவு செய்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது. 
 
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அவரது தந்தை மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில்   எச்.டி.ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கடந்த 4ம் தேதி கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்த நிலையில் மக்கள் பிரதிநிதிகளுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் எச்.டி.ரேவண்ணாவுக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கியது.  
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்