ரூ.8.49 கோடி கொள்ளையடித்து... இலவச ஜூஸுக்கு மாட்டிக் கொண்ட தம்பதி

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (16:43 IST)
நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த ஆயுதமேந்திர ஒரு குழம்பல், ஊழியர்களை மிரட்டி ரூ 8 கோடியே 49 லட்சம் பணத்தை கொள்ளையடித்த நிலையில், அக்கும்பலைச் சேர்ந்த ஒரு தம்பதியரை போலீஸர் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் நிதி நிறுவனம்  ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 10 ஆம் தேதி ஆயுதமேந்திய ஒரு கும்பல் நுழைந்து, ஊழியர்களை மிரட்டி ரூ.8 கோடியே 49 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த அம்மாநில போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மந்தீப் கவுர் பெண்ணும், அவரது கணவர் ஜெஸ்வீந்தர் சிங்கும் இருப்பதாக தகவல் தெரியவந்தது.

இதையடுத்து, இவர்களை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டிருந்தனர். அதன்படி,  அவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், தம்பதியர் உத்தரகாண்ட்டில் இருப்பதாகவும் அங்குள்ள சீக்கிய மத வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு செய்ய இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக பழ ஜூஸ் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினர்.

அங்கு, பஞ்சாபில் ரூ.8 கோடியை கொள்ளையடித்த  தம்பதியர் மந்தீப் கவுரும், அவரது கணவர் ஜெஸ்வீந்தர் சிங்கும்  ஹிம்ஹண்ட் ஷாகிப் மத வழிபாட்டிற்கு வந்திருந்தனர்.

இவர்களைக் கண்டுபிடித்த போலீஸார், அவர்கள் இருவரும் இலவச ஜூஸை வாங்கிச் சென்றதை கவனித்து, அவர்களை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ரூ. 21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட ரூ.8 கோடி ரூபாயில் இருந்து ரூ. 6 கோடியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்