சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரயில்கள் ஆவடி, திருவள்ளூரில் இருந்து இயக்கம்!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (16:33 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் 7 ரயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக தண்டவாளத்தில் தேங்கி நிற்கும் மழை நீரால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூர் செல்லும் ரயில் ஆவடியிலிருந்து இயக்கப்படுவதாகவும் அதேபோல் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
வெள்ள நீரை வடிய வைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த பணிகள் முடிவடைந்த பின்னரே வழக்கம் போல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
பெரும்பாலான ரயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளுவர் இருந்து இயக்கப்படுவதால் பயணிகள் தங்களுடைய ரயிலை பிடிக்க ஆவடி மற்றும் திருவள்ளுவருக்கு செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்