இந்த நிலையில் சமீபத்தில் மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீஸாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதில், பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போட்டிருந்த கொட்டகைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் தெரிவித்ததாகவும், கிழக்கு ரயில்வே பணியில் சேரவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.