முதல்வர் வீடு அருகே கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு.. பெரும் பரபரப்பு

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (17:29 IST)
பஞ்சாப் முதல்வர் வீடு அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பஞ்சாப் முதல்வராக கடந்த சில கடந்த ஆண்டு பதவி ஏற்ற பகவந்த் மன் சிங் அவர்களின் வீடு அருகே குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
இதனை அடுத்து வெடிகுண்டு சிறப்பு போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு அருகே சென்றதாகவும் அந்த குண்டு எத்தகைய தன்மை வாய்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பஞ்சாப் முதல்வரின் வீடு அருகிலேயே வெடிகுண்டு வைக்கும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு உள்ளதா என்றும், இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் பஞ்சாப் முதல்வரின் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்