ஒரே மாதத்தில் 75 லட்சம் வேலையிழப்புகள்! – அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (09:59 IST)
இந்தியாவில் கொரோனா காரணமாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பலர் வேலையிழந்துள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் முதலாக கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இதனால் பகுதி நேர, வார இறுதி மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்டவற்றால் பல்வேறு அமைப்பு சாரா தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிஎம்ஐஇ எனப்படும் இந்திய பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வில் கடந்த மாதத்தில் மாநில அரசுகள் அறிவித்த கட்டுப்பாடுகளால் சுமாராக 75 வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்