கவர்னரை அடுத்து டெல்லி செல்லும் அண்ணாமலை.. மோடி, அமித்ஷாவுடன் முக்கிய ஆலோசனை..!

வியாழன், 23 மார்ச் 2023 (11:26 IST)
தமிழக கவர்னர் ரவி இன்று டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆன்லைன் தடை மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக கவர்னர் ரவி திடீரென்று டெல்லி சென்றார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 26ஆம் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் அவசரமாக இன்று டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
அவர் டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோரை சந்திக்கிறார். மேற்கண்ட மூன்று பேர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
தமிழக கவர்னர் ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் ஒரே நாளில் டெல்லி செல்ல இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்