வேடிக்கை பார்த்த பாவத்திற்கு 61 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில்!

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (08:25 IST)
தசரா பண்டிகையின் போது ராவணனை எரிக்கும் வேளையில், நடத்தப்பட்ட வாண வேடிக்கையை காண ரயில் தண்டவாளத்தில் நின்றுக்கொண்டிருந்த மக்கள் மீது ரயில் பாய்ந்தது. இதில் 61 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். 
 
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தசரா விழா கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக வாண வேடிக்கை நடத்தப்பட்டது. அதனை காண மக்கள் பலர் குவிந்திருந்துள்ளனர். சுமார் 700-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர். 
 
இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ரயில் தண்டவாளத்தில் நின்று வாண வேடிக்கையை பார்த்துள்ளனர். அப்போது அமிர்தசரசிலிருந்து ஜலந்தர் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் 61 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில், குழந்தைகளும் பெண்களும் அடக்கம்.
 
சுமார் 70வதுக்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்திற்கு பஞ்சாப் முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் அரசு நிவாரணமாக வழங்கும் என தெரிவித்துள்ளார். 
 
அதோடு, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி ஆகியோரும் இந்த கோர விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்