இந்தியாவில் 4.50 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி !

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (09:50 IST)
இந்தியாவில் இதுவரை 4.50 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 46,951 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,16,46,081 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 212 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,59,967 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,11,51,468 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,34,646 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்தியாவில் இதுவரை 4.50 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 4.62 லட்சம் மற்றும் தமிழகத்தில் இதுவரை 20.86 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்