காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் 33 ஆயிரம் மரணங்கள்.. சென்னையிலுமா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!

Prasanth Karthick
வெள்ளி, 5 ஜூலை 2024 (09:09 IST)

இந்தியாவில் காற்று மாசுபாடு ஒரு பெரும் பிரச்சினையாக மாறி வரும் நிலையில் ஆண்டுக்கு 33 ஆயிரம் பேர் காற்று மாசுபாடால் இறப்பதாக வெளியாகியுள்ள ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

காடுகளின் பரப்பளவு குறைந்து வருதல், அதிகமான வாகன பயன்பாடுகள் உள்ளிட்டவற்றால் இந்தியாவில் பல பகுதிகளில் காற்று மாசுபாடு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. தலைநகர் டெல்லியில் காற்று மக்கள் சுவாசிக்க முடியாத அளவு மோசமடைந்துள்ளது.

இந்நிலையில் பிரிட்டிஷ் லான்செட் மருத்துவ ஆய்வறிக்கையில் இந்தியாவில் ஆண்டுதோறும் 33 ஆயிரம் பேர் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தலைநகர் டெல்லி, பெங்களூரு, சென்னை, அகமதாபாத் உள்ளிட்ட 10 நகரங்கள் மோசமான அளவு காற்றைக் கொண்டவையாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த காற்று மாசுபாட்டால் டெல்லியில் மட்டும் ஆண்டுக்கு 12 ஆயிரம் பேர் பலியாவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்