2ஜி வழக்கால் தொல்லை: உச்சநீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்த விசாரணை அதிகாரி!!

புதன், 1 நவம்பர் 2017 (17:08 IST)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வந்த விசாரணை அதிகாரி இந்த வழக்கால் பணியில் தொல்லை ஏற்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.


 
 
மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தனிக்கை குழு குற்றம்சாட்டியது. 
 
இதில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.  இந்த வழக்கின் மீதான் தீர்ப்பு நவம்பர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. 
 
இந்த வழக்கில் சிபிஐ சார்பில் விவேக் பிரியதர்ஷி, அமலாக்கத்துறை சார்பில் ராஜேஸ்வர் சிங் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக செயல்பட்டனர். 
 
இந்நிலையில், ராஜேஸ்வர் சிங் தனக்கு 2ஜி வழக்கால் பணியில் தொல்லைகள் தரப்படுவதாகவும், தேவையற்ற வழக்குகளால் பணி உயர்வு பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்