கடன் தொல்லை? 2ஜி சேவையை நிறுத்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முடிவு!!

வெள்ளி, 27 அக்டோபர் 2017 (16:52 IST)
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அனில் அம்பானி தலைமையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இவரது தலைமையில் ஆர்காம் நெட்வொர்க்கும் அடங்கும்.


 
 
இந்நிலையில், அனில் அம்பானி தலைமையிலான ஆர்காம் தொலைதொடர்பு நிறுவனம் 2ஜி சேவையை நிறுத்த முடிவு எடுத்துள்ளதாம்.
 
வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் 2ஜி சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2ஜி சேவையை பயன்படுத்தி வரும் 4 கோடி வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போனை அடிப்படையாக கொண்டு 3ஜி/4ஜி சேவைக்கு மாற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. 
 
மேலும், இந்த துறையில் போட்டி அதிகரித்துவிட்டது என ஆர்காம் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆர்காம் நிறுவனத்திற்கு ரூ.46,000 கோடி கடன் உள்ளதாகவும் சிறிது சிறிதாக நிறுவனம் கலைக்கபடும் என பேச்சு அடிபடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்