இந்தியாவின் வட மாநிலங்களில் நாளுக்கு கொரோனா பாதிப்பும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவை ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இப்போது மகாராஷ்டிராவில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் பீட் நகரில் உள்ள சுவாமி ராமானந்த் தீர்த்த கிராமப்புற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த 22 பேரின் உடலை ஒரே ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்று எரியூட்டினர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. போதுமான ஆம்புலன்ஸ் சேவை இல்லாததும் அதிகளவில் கொரோனா பலி ஏற்படுவதுமே இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.