கர்நாடகாவில் ஆட்சி கவிழ்கிறதா? 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்

செவ்வாய், 15 ஜனவரி 2019 (17:11 IST)
கர்நாடகாவில் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இருவர் காங்கிரஸ் ஜனதா தளத்திற்கு தாங்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெறும் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக குமாரசாமி பதவியேற்றார்.
 
104 தொகுதிகளில் வென்ற பாஜக, எப்போது வேண்டுமானாலும் குமாரசாமியின் ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடிக்க முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
 
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவுக்கு தாவவிருப்பதாகவும் இதனால் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து என்றும் கூறப்பட்டது.
 
இந்நிலையில் காங்கிரஸ் ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நாகேஷ், சங்கர்  இருவர் தாங்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுனருக்கு கடிதம் எழுத்தியுள்ளனர். இதே நிலை நீடித்தால் கட்நாடகாவில் ஆட்சி கவிழ வாய்ப்பிருக்கிறது. இந்த இரு எம்.எல்.ஏக்களும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்