கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே இதுவரை 1765 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டுமே நேற்று மட்டுமே 100 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் சீனாவில் மட்டுமே 1756 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் அங்கு 70,400 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைர்ஸ் உலகம் முழுவதும் 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. இதனை தடுக்கும் முயற்சியை உலக நாடுகள் மேற்கொண்டு வரும் நிலையில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகமாகி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.