கொரோனா பாதித்ததால் 149 பேர் தற்கொலை: அமைச்சரின் அதிர்ச்சி தகவல்!
புதன், 27 அக்டோபர் 2021 (17:15 IST)
கொரோனா பாதித்ததால் 149 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அமைச்சர் புள்ளிவிபரம் ஒன்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா என்று கூறப்பட்டு வரும் நிலையில் கேரளாவில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் சில புள்ளிவிவரங்களை அறிவித்தார்
அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாற்பத்தொரு கர்ப்பிணிகள் மரணமடைந்ததாகவும் கொரோனா பாதிப்பு அச்சம் காரணமாக 149 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்
இந்த புள்ளிவிவரங்கள் கேரள மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததே அதிக தற்கொலைக்கு காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது.