முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த்!

புதன், 27 அக்டோபர் 2021 (16:08 IST)
சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து தனது புதிய செயலிக்காக வாழ்த்துப் பெற்றுள்ளார்.

இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஹூட் என்ற  புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த செயலியைக் கடந்த திங்களன்று ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தி வைத்து தன்னுடைய குரலால் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தனது புதிய செயலிக்காக வாழ்த்துகளைப் பெறுவதற்காக சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து hoote App-ஐ பற்றி விவரித்து, அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்